உயில் என்பது ஒருவர் தன் மரணத்திற்கு பிறகு தன் சொத்துக்கள் யாருக்கு போக வேண்டும் என்று எழுதி வைக்கும் ஆவணம். இதை Will அல்லது Testament என்றும் சொல்வோம்.
உயில் எழுதுவது ஏன் அவசியம்:
- உயில் இல்லாமல் இறந்தால் சட்டப்படி வாரிசுகளுக்கு சொத்து பிரிக்கப்படும். இது உங்கள் விருப்பத்திற்கு மாறாக இருக்கலாம்.
- குடும்பத்தில் தகராறு வரலாம்.
- உயில் இருந்தால் நீங்கள் விரும்பியபடி சொத்தை யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம்.
உயில் எழுதும் முறை:
- 18 வயது நிறைவடைந்த, மன நிலை சரியாக இருக்கும் எவரும் உயில் எழுதலாம்.
- தெளிவான மொழியில் எழுதவேண்டும்.
- இரண்டு சாட்சிகள் கையெழுத்து போட வேண்டும்.
- சாட்சிகள் உயிலில் Beneficiary ஆக இருக்கக்கூடாது.
பதிவு செய்வது கட்டாயமா:
இந்தியாவில் உயில் பதிவு செய்வது கட்டாயம் இல்லை. ஆனால் பதிவு செய்தால் மிகவும் நல்லது.
- Sub-Registrar Office ல் பதிவு செய்யலாம்.
- பதிவு செய்த உயிலை யாரும் சவால் செய்வது கடினம்.
- அசையா சொத்துக்களான நிலம், வீடு இவற்றுக்கு உயில் பதிவு செய்வது மிகவும் பாதுகாப்பானது.
உயிலை மாற்றலாமா:
உயில் எழுதியவர் உயிரோடு இருக்கும் வரை எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றலாம். புதிய உயில் எழுதினால் பழைய உயில் தானாக செல்லாது ஆகிவிடும். Codicil என்று சிறிய திருத்தங்கள் செய்யலாம்.
📞 இப்போதே ஆலோசனை பெறுங்கள்: Adv. B. Sivasubramanian — +91 97104 21215