டிவோர்ஸ் ஆகணும்னா என்ன முதலில் செய்ய?

Family Law · April 15, 2025 · By Adv. B. Sivasubramanian

தமிழ் · Tamil Article

திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது என்று உணரும் போது என்ன செய்வது என்று தெரியாமல் குழம்புவது இயற்கை. இந்த கட்டுரை உங்களுக்கு சட்டரீதியான வழிகாட்டுதல் தருகிறது.

முதலில் என்ன செய்ய வேண்டும்:

  • அனுபவமிக்க குடும்ப சட்ட வழக்கறிஞரை சந்தியுங்கள்.
  • உங்கள் நிலை, காரணம், குழந்தைகள் விஷயம் எல்லாவற்றையும் தெளிவாக விளக்குங்கள்.
  • வழக்கறிஞர் உங்கள் நிலைமைக்கேற்ப சரியான வழியை சொல்வார்.

விவாகரத்துக்கான வழிகள்:

  • Mutual Consent Divorce: இருவரும் சம்மதித்தால் மிகவும் எளிதான வழி. Hindu Marriage Act Section 13B படி ஒரு வருடம் பிரிந்து வாழ்ந்த பிறகு இரண்டு Petition தாக்கல் செய்யலாம். 6 மாத Waiting Period தள்ளுபடி செய்யலாம்.
  • Contested Divorce: ஒருவருக்கு மட்டும் விவாகரத்து வேண்டும் என்றால் Cruelty, Desertion, Adultery போன்ற காரணங்கள் நிரூபிக்க வேண்டும். இது நீண்ட நேரம் எடுக்கும்.

என்னென்ன விஷயங்கள் தீர்மானிக்கப்படும்:

  • Alimony அதாவது ஜீவனாம்சம் எவ்வளவு கொடுக்க வேண்டும்
  • குழந்தையின் Custody யாரிடம் இருக்கும்
  • சொத்து பிரிப்பு எப்படி இருக்கும்
  • Maintenance யாருக்கு எவ்வளவு

முக்கியமான ஆவணங்கள்:

  • திருமண பதிவு சான்றிதழ்
  • குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ்
  • வருமான சான்றுகள்
  • சொத்து ஆவணங்கள்
  • கொடுமை அல்லது தகராறுக்கான சான்றுகள் இருந்தால் அவையும்

Mediation முயற்சி:

நீதிமன்றம் பொதுவாக முதலில் Mediation க்கு அனுப்பும். திருமண வாழ்க்கை சரி செய்யமுடியுமா என்று பார்க்கும். இது தோல்வியடைந்தால் விவாகரத்து வழக்கு தொடரும்.

📞 இப்போதே ஆலோசனை பெறுங்கள்: Adv. B. Sivasubramanian — +91 97104 21215

Learn more about Family Law services →

Back to all articles