விவாகரத்து அல்லது பிரிவினைக்கு பிறகு குழந்தைகளின் நலன் மிக முக்கியம். குழந்தை யாரிடம் இருந்தாலும், மற்றொரு பெற்றோர் குழந்தையின் செலவுகளுக்கு பங்களிக்க சட்டரீதியான கடமை உள்ளது.
குழந்தை பராமரிப்பு பணம் என்றால் என்ன:
குழந்தையின் படிப்பு, உணவு, உடை, மருத்துவம், வாழ்க்கை செலவுகள் அனைத்தையும் உள்ளடக்கியது இந்த பராமரிப்பு பணம். இதை Maintenance அல்லது Child Support என்று அழைக்கிறோம்.
சட்டரீதியான அடிப்படை:
- Section 125 of BNSS 2023 படி தந்தை தன் குழந்தைக்கு பராமரிப்பு பணம் கொடுக்க கட்டாயப்படுத்தப்படலாம்.
- Hindu Adoption and Maintenance Act, 1956 படியும் இந்த உரிமை உண்டு.
- குழந்தை திருமணமாகாத மகளாக இருந்தால் திருமணம் வரை பராமரிப்பு பணம் பெறலாம்.
- மகன் என்றால் 18 வயது வரை கட்டாயம் பெறலாம்.
- மகனுக்கு உடல் அல்லது மன ஊனம் இருந்தால் வயது வரம்பு இல்லாமல் பெறலாம்.
எவ்வளவு பணம் கிடைக்கும்:
நீதிமன்றம் கீழ்க்கண்டவற்றை கணக்கில் எடுத்துக்கொள்ளும்:
- தந்தையின் வருமானம் மற்றும் சொத்து நிலை
- குழந்தையின் தேவைகள் மற்றும் வாழ்க்கைத் தரம்
- தாயின் வருமான நிலை
- குழந்தை யாரிடம் வாழ்கிறது என்பது
உடனடியாக என்ன செய்வது:
- Family Court அல்லது Magistrate Court ல் Maintenance Petition தாக்கல் செய்யுங்கள்.
- Interim Maintenance அதாவது வழக்கு நடக்கும் போதே தற்காலிக பணம் கேட்கலாம்.
- நல்ல குடும்ப சட்ட வழக்கறிஞரின் உதவியுடன் உங்கள் உரிமையை பெறுங்கள்.
📞 இப்போதே ஆலோசனை பெறுங்கள்: Adv. B. Sivasubramanian — +91 97104 21215