Anticipatory Bail என்பது கைது ஆவதற்கு முன்பே நீதிமன்றத்திடம் பாதுகாப்பு கேட்கும் ஒரு சட்ட வழிமுறை. உங்களுக்கு எதிராக வழக்கு பதிவாகலாம் அல்லது கைது ஆகலாம் என்ற அச்சம் இருந்தால் Anticipatory Bail மூலம் முன்கூட்டியே பாதுகாப்பு பெறலாம்.
Anticipatory Bail என்றால் என்ன:
- BNSS 2023 Section 482 படி Sessions Court அல்லது High Court ல் Anticipatory Bail கேட்கலாம்.
- இது கிடைத்தால் கைது செய்யப்பட்டாலும் உடனே Bail மேல் விடுவிக்கப்படுவீர்கள்.
- இது உங்களை தேவையற்ற கைதிலிருந்து பாதுகாக்கும் சக்திவாய்ந்த சட்ட ஆயுதம்.
யாருக்கு தேவைப்படும்:
- வணிக தகராறுகளில் பணம் சம்பந்தப்பட்ட வழக்குகளில் சிக்கியவர்களுக்கு
- குடும்ப வழக்குகளில் பொய்யான புகார் அஞ்சுபவர்களுக்கு
- சொத்து தகராறுகளில் இருப்பவர்களுக்கு
- எந்தவிதமான Non-Bailable வழக்கில் கைது அஞ்சுபவர்களுக்கு
நீதிமன்றம் என்னென்ன பார்க்கும்:
- குற்றச்சாட்டின் தன்மை மற்றும் கடுமை
- முன்னர் குற்றவாளியாக இருந்தீர்களா என்பது
- சாட்சியங்களை அழிக்க முயற்சிப்பீர்களா என்பது
- நாட்டை விட்டு தப்பிவிடுவீர்களா என்பது
- விசாரணையில் ஒத்துழைப்பீர்களா என்பது
எவ்வளவு விரைவாக கிடைக்கும்:
நல்ல வழக்கறிஞர் மூலம் Urgent Hearing கேட்டால் ஒரே நாளில் கூட Anticipatory Bail கிடைக்கலாம். காலதாமதம் செய்யாமல் உடனே வழக்கறிஞரை அணுகுவது மிக முக்கியம்.
📞 இப்போதே ஆலோசனை பெறுங்கள்: Adv. B. Sivasubramanian — +91 97104 21215